
தவெக தலைவர் விஜய் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, ஜனநாயகத்திற்கு எதிரான வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மசோதாவை திரும்ப பெறாத பட்சத்தில் இஸ்லாமிய சகோதரர்களோடு இணைந்து வக்பு உரிமை சட்டப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகமும் போராடும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் வக்பு வாரிய சட்டத்தை சிதைப்பது என்பது சிறுபான்மையினருக்கு நம் அரசியல் அமைப்பும், நம் நாட்டின் தலைவர்களும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விடுவதன்றி வேறென்ன?. ஜனநாயக அவையில் அது பற்றி விவாதிக்க போதுமான இஸ்லாமிய உறுப்பினர்கள் இல்லையே ஏன்?. இதுதான் இன்று பாஜக அரசு நிறுவியுள்ள மிக மோசமான பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல் என்று தெரிவித்துள்ளார்.