
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு பெருமை சேர்க்கின்ற விதமாக தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு….. புரட்சித்தலைவர் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்… மாண்புமிகு அம்மாவின் உடைய அரசு, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு பெயர் மாற்றம் செய்து, இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் உடைய திருநாமத்தின் பெயர் சூட்டப்பட்டது.
அதை இந்த விடியா திமுக அரசு, அரசியல் கால்புணர்ச்சியின் காரணமாக அதையும் மாற்றி மீண்டும் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக கல்லூரி என்று திருத்தப்பட்டது. அதையும் கண்டித்து தான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். ஓபிஎஸ் தான் திமுகவுக்கு போயிட்டாரே…. அண்ணா திமுகவில் இருந்தால்தான் அவருக்கு சூடு, சொரணை, இருக்கும். சூடு, சொரணையே கிடையாதே.
அண்ணா திமுகவின் ரத்தம் எங்க உடம்புல ஓடுது…. எங்களுடைய தலைவர் இரத்தம் எங்களுக்கு ஓடுது… தலைவரின் உடைய வழியில் நாங்கள் நடந்து கொண்டு இருக்கின்றோம்… கட்சி நடத்துகிறோம்… பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா இரு பெரும் தலைவர்கள்…. திராவிட முன்னேற்றக் கழகம் தீய சக்தின்னு சொன்னாங்க. இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா இருக்கின்ற போது ஒரு சவாலாக எல்லா நிலைகளையும் சந்தித்தார்கள். இன்றைய தினம் சில எட்டப்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும்.. நீங்களே வெளிச்சம் போட்டு காட்டிட்டிங்க என தெரிவித்தார்.