உத்தரப்பிரதேசத மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக 40 வயதான டில்ஷாத் என்பவர் அவரது மனைவி ஷனோவால் வீட்டின் மேற்கூரையின் மீது தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் டில்ஷாத்-ஷனோ தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் நீண்ட காலமாக பிரச்சனைகள் நடந்து கொண்டே இருந்ததுள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ நாளில் ஷனோவிடம் டில்ஷாத் உணவு கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறின் போது, ஷனோ அவரது கணவரை கூரையின் விளிம்பிலிருந்து தள்ளியதாக குடும்பத்தினர் கூறினர். இந்த சம்பவத்துக்குப் பிறகு, டில்ஷாத் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் இது தொடர்பாக டில்ஷாத் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி ஷனோவை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணையில் ஷனோ அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, “அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். நேற்று கூட குடித்துவிட்டு கூரையிலிருந்து தானாக குதித்தார். என் மாமியார் பொய் குற்றச்சாட்டு வைக்கிறார்” என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.