
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இன்னைக்கு youtubeல என்னோட அசெம்ப்ளி ஸ்பீச் எவ்வளவு இருக்கு. நீட் அப்படிக்கின்ற ( National Eligibility cum Entrance Test) அப்படி என்ற ஒரு வார்த்தையே தமிழகத்துக்கு தெரியாதே.. தெரியாத ஒரு வார்த்தையை…. தெரியாத ஒரு விஷயத்தை… தெரியாத ஒரு கான்செப்ட்டை… தெரியாத ஒரு பாலிசியை…. தெரியாத ஒரு கொள்கையை… தெரியாத ஒரு வார்த்தை… அன்றைக்கே ADMK எதிர்த்து.
27. 12.2010இல் மத்திய அரசு முதன் முதலில் நீட் தேர்வுக்க்கான நோட்டிபிகேஷனை போடுறாங்க. அப்பவே புரட்சி தலைவி அம்மா இதை எதிர்த்தாங்க. இந்த நோட்டிபிகேஷனை எதிர்த்து கோர்ட்டுக்கு போனாங்க. குறைந்தபட்ச தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று கேட்டாங்க… 2013இல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மிகப்பெரிய வழக்கை வாதாடி… உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பையும் பெற்று கொடுத்தாங்க.
அதன் பிறகு ரிவ்யூ பெட்டிஷன் போடாதீங்க என்று கூட காங்கிரஸ் அரசாங்கத்தை வலியுறுத்தினாங்க. பிரதமருக்கு பலமுறை சொன்னாங்க. அட்லீஸ்ட் நான் உச்சநீதிமன்றத்திற்கு போய் அரசியல் சாசன அமர்வில் நீட் இல்லைன்னு நான் தீர்ப்பு வாங்கிட்டேன். இந்த தீர்ப்புல நீங்க ரிவ்யூ பெட்டிஷன் போடாதீங்கன்னு என அம்மா சொன்னாங்க. அதையும் கேக்காம அன்றைக்கு ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கவர்மெண்ட் கூட்டணியில் DMK இருந்தாங்க. அவங்க போய் ரிவ்யூ பெட்டிஷன் போடுறாங்க. திரும்ப மறு உத்தரவு பெற்று தான் இந்த பாதகம் வந்தது. அம்மா இருந்தபொழுது ரெகுலேஷன் இருந்தது, ஓராண்டுக்கு விலக்கு பெற்றோம் என தெரிவித்தார்.