
தலைநகரான டெல்லியில் உள்ள மயாபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தண்ணீர் ஏடிஎம்-ஐ திறந்து வைத்துள்ளார். இந்த ஏடிஎம் மூலமாக மக்கள் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எடுத்துக் கொள்ள முடியும் என்றும் இதற்காக அவர்களுக்கு ஒரு கார்டு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதே போன்று 500 தண்ணீர் ஏடிஎம்களை ஒவ்வொரு நகரங்களிலும் வைக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரின் விலை 20 லிட்டருக்கு 1.60 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.