செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி,  நீட்டில் இவ்வளவு நாள் எடப்பாடி கைவிட்டுட்டாரு. இதை செய்து வைப்பதற்கு மத்தியில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது. வந்தவுடன் அதை ரெடியா வச்சி இருந்தா இந்த மாதிரி சூழ்நிலையை உருவாக்கி வைக்கும் போது… வந்தவுடன்,  மத்திய சர்க்கார் முடிவெடுக்க  ஏதுவாக இருக்கும் என தெரிவித்தது.

நீட் விலக்கு கோரி DMK நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் காங்கிரஸிடம் கையெழுத்து வாங்குமா என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொன்னது தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ் பாரதி,  பா.சிதம்பரம் யார் ? அவர் அண்ணா திமுக அமைப்புச் செயலாளரா ?  அவரே  இன்னைக்கு சொல்லி இருக்காருன்னு சொல்றேன்…

தமிழ்நாட்டை பொறுத்தமட்டிலும் எல்லோரும் கையெழுத்து போடுவதற்கு தயாராக இருக்கிறார்கள். எல்லோரும் அறிக்கை விட்டிருக்கிறார்கள். பா.சிதம்பரமே சொல்லி இருக்காரு. எங்க மாநிலத்துல,  நாங்க செய்வோம். ஆல் இந்தியாவுல வரும்போது அதை அழுத்தம் கொடுத்து வாங்குவதற்கு இந்த கையெழுத்து  ஹெல்ப் பண்ணும் என்பதற்காக ஆரம்பிக்கிறோம் என தெரிவித்தார்.