
பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய குபா கிருஷ்ணன், அண்ணா அவர்கள் 1957இல் சொல்லுகின்ற பொழுது ஒன்றை சொன்னார்கள்…. குச்சிமொழி வஞ்சகரை பஞ்சனைக்கு அனுப்பி, அந்த கோல குமரிகளின் கனி இதழ் தந்து சிரிக்க வைத்து, அந்த மோகன சிரிப்பிலே நம்முடைய மூதாதையர்களை மயக்க வைத்தவர்கள் என்று சிலரை குறிப்பிடுகிறார்கள். நான் கூவத்தூர் எல்லாம் குறிப்பிடவில்லை.
முன்னாள் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து தானே இரு துரோகியை இந்த நாட்டின் பொதுச் செயலாளர், முதலமைச்சராக அடையாளம் காட்டினார்கள். எந்த நிலையிலே காட்டப்பட்டது ? தொண்டர்களிடையே எண்ணத்தின்படி காட்டப்பட்டதா ? அல்ல பொதுக்குழுவின் வழிகாட்டுதலின்படி காட்டப்பட்டதா ? இல்லையே…. எங்கிருந்தோ வந்தார் ? இடை சறுக்கல் ஆனார் எடப்பாடி. இன்றைக்கு அந்த நிலையிலேயே நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
யாரிடத்தில் இருந்து நாம் உரிமையை பெற வேண்டும். எவன் ஒருவன் நம்முடைய உரிமையை தட்டிப் பறித்து வைத்திருக்கிறானோ, அவனிடத்திலிருந்து தான் நாம் மீட்க வேண்டும். அது மீட்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது. உங்களை நல் வழிப்படுத்தி கூட்டிச் செல்வதற்காக தான் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் வந்திருக்கிறார்கள். நம்மை பொருத்தமட்டிலே ஒரு எதிரி இல்லை…. இரண்டு எதிரி.
அண்ணா திமுகவிலிருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு திமுக. அந்த திமுக நமக்கு பிரதான எதிரி. அதை எத்தனை பேராக இருந்தாலும் நான் தான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த எதிரியாக நாம் எடப்பாடியை பார்க்க வேண்டும். இந்த இரண்டு எதிரிகளையும் நாம் வீழ்த்துவதற்கு, நாம் வியூகம் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.