
பிரியாணி என்பது பலரது விருப்பமான உணவுகளில் ஒன்றாகும். சைவ மற்றும் அசைவ பிரியர்கள் இருவருக்குமே பிரியாணி மிகவும் பிடித்த உணவாகும். அனைத்து தரப்பு மக்களுக்கும் ருசித்து உண்ணக்கூடிய உணவு வகையாகும். ஆனால் சமீபத்தில் வைரல் ஆகி வரும் “ஐஸ்கிரீம் பிரியாணி” உணவுப் பிரியர்களை சற்று யோசிக்க வைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் ஹீனா சமையல்கலை நிபுணரான இவர் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்.
சமூக வலைதளங்களில் தனது பேக்கரியில் தயாரித்த உணவு வகைகள் மற்றும் விளம்பரங்கள் குறித்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் சமீபத்தில் ஐஸ்கிரீம் பிரியாணி தயாரித்து அதனை வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவில் இரண்டு பெரிய பாத்திரங்களில் ஐஸ்கிரீம்கள் கலந்த பிரியாணியை தயாரித்து கரண்டியால் எடுத்துக்காட்டுகிறார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதள பயனர்கள் பலரும் இந்த வீடியோ குறித்து விமர்சனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram