
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமீபத்தில் சட்டமன்றத்திலும் பேசினேன்….. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் நான் வேண்டுகோள் வைத்தேன்… இனி யார், எந்த பிறந்த நாளாக இருக்கட்டும்….. எந்த ஒரு நல்ல நாளாக இருக்கட்டும்.. பரிசுகள் கொடுக்கும் பொழுது அவர்களுக்கு எல்லாம் ஒரு வேண்டுகோள் வைத்தேன்….
சட்டமன்றத்தில் என்னுடைய உரையிலே இருந்தது…. அனைவருக்கும் பரிசுகள் கொடுக்கும் பொழுது…. மகளிர் சுய உதவி குழுக்கள் தயார் செய்த பொருட்கள் தரமான பொருட்களாக இருக்கின்றது… அவர்களுக்கு உதவுகின்ற வகையில் ஒவ்வொருத்தர் இந்த பொருட்களை வாங்கி, பரிசு கொடுங்கள் என்று சட்டமன்றத்தில் பேசி இருந்தேன்.
சமீபத்தில் என்னுடைய பிறந்தநாள் விழாவில் கூட எனக்கு பரிசு பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள்…. தயவுசெய்து மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கின்ற பொருட்களை பரிசாக கொடுங்கள் என்று வேண்டுகோள் வைத்து, அதை நடத்தி முடித்தோம்… இன்னும் சொல்லப்போனால் நான் தொடர்ந்து நீங்கள் தயாரிக்கின்ற பொருட்களை தான் உபயோகித்து கொண்டு வருகின்றேன்….
என்னுடைய வீட்டில் எங்கு பார்த்தாலுமே நீங்கள் தயாரிக்கின்ற பொருட்கள் தான்…. என்னுடைய வீட்டில் மட்டுமல்ல, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வீட்டிலும் எங்கு பார்த்தாலும் மகளிர் சுய உதவி குழுக்கள், நீங்கள் தயாரிக்கின்ற இந்த பொருட்கள் தான்… சட்டமன்றத்தில் இந்த கோரிக்கை வைத்தேன்… அதை தொடர்ந்து செயல்படுத்தியும் வருகின்றோம் என தெரிவித்தார்.