
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் சங்பரிவார்களின் ஆட்சியை அதிகார பீடத்திலிருந்து… ஆட்சிபீடத்திலிருந்து அப்புறப்படுத்துவது ஒன்றே போது நம் முன்னால் இருக்கிற சவால். இதை மையப்படுத்தி கடந்த 10 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிஜேபிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும், ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற குரலை ஓங்கி ஒழித்து வருகின்றது.
தமிழ்நாடு முழுவதும் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டதை மட்டும் அல்லாமல் திமுக, இடதுசாரிகள் ஒருங்கிணைந்து, காங்கிரசோடு இணைந்து, அகில இந்திய அளவிலேயே சனாதன பாசிஸ்டுகளை விரட்டி அடிப்பதற்கு ஓரணியில் திரள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிற இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. அது இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருக்கிறது. ”இந்தியா” என்கிற கூட்டணியாக உருவாகி இருக்கிறது.
அண்மையிலிருந்து நடைபெற்ற ஏழு சட்டமன்ற தேர்தலில்… வட இந்திய மாநிலங்களில்… நான்கு இடங்களில் ”இந்தியா” கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று இருக்கிறது. ”இந்தியா” கூட்டணிக்கு இன்றைக்கு பரந்த அளவில்… அகில இந்திய அளவில் மிகப்பெரும் வரவேற்பு, ஆதரவும், பெருகி வருகிறது. சனாதன பாசிஸ்டுகள் அதனால் இன்றைக்கு அச்சம் அடைந்திருக்கிறார்கள், பதற்றம் அடைந்திருக்கிறார்கள், வாய்க்கு வந்தபடி உளறிக் கொண்டிருக்கிறார்கள்.