
கடந்த ஆண்டு இந்து மத குரு மஹாந்த் ராம்கிரி மஹராஜ் என்பவர் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவருக்கு ஆதரவாக மகாராஷ்டிரா மாநிலம் கன்காவிலி தொகுதி பாஜக எம்.எல்.ஏ நித்தேஷ் ரானே பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, மஹாந்த் ராம்கிரி மஹராஜ்-க்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உங்களது மசூதிக்குள் புகுந்து ஒவ்வொருவரையும் வேட்டையாடுவோம். இதை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதனை கேட்டு பொதுக்கூட்டத்தில் இருந்த மக்கள் அவருக்கு ஆரவாரம் செய்தனர். இவரது இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், நிதேஷின் பிரயோகித்த வார்த்தைகளுக்கு பாஜக கட்சியும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. அரசியல்வாதிகள் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று பாஜக செய்தி தொடர்பாளர் துஷின் சின்ஹா
கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நித்தீஷ் மீது 2 எப்.ஐ ஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இதேபோன்று இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியதற்கு இவர்கள் மீது வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
2 FIRs have been lodged against MLA Nitesh Rane for making provocative remarks.
The speeches were delivered during a Hindu community rally in support of #RamgiriMaharaj#NiteshRane #Ahmednagar#ArrestRamgiriMaharaj#BreakingNews #Maharashtra#India
pic.twitter.com/TWkA5VdLiB— Mr. Shaz (@Wh_So_Serious) September 2, 2024