ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை பகுதியில் இஸ்மத் இனூன்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி வாகனம் ஒன்றிற்கு டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதில் பயணம் செய்த 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பயந்துப்போன சிறுமி, இது குறித்து தன் பெற்றோரிடம் அழுதுக்கொண்டே கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் அந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இஸ்மத் இனூனை  கைது செய்தனர்.