
நீட் விலக்கு, மருத்துவ கல்வியில் மாநிலத்தின் உரிமை உள்ளிட்ட போரில் நாம் நிச்சயம் வெல்வோம். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். புதிய மருத்துவக் கல்லூரியை திறப்பதற்கு மத்திய அரசு தடை விதித்திருக்கும் போக்கையும் எதிர்த்தோம்.
நீட்டை எதிர்க்கும் நேரத்தில் நெக்ஸ்ட் என்னும் அடுத்த ஆபத்தையும் எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மாநிலத்தின் தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தோடும் ஒப்பிட முடியாது என சென்னையில் நடந்த சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க மாநாட்டில் காணொளியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.