திருச்செந்தூர் அருகே காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சேகுநூர்தின் (24), ஆசிப் அலி (19) ஆகிய இரு இளைஞர்கள், சமூக வலைதளங்களில் கையில் ஆயுதங்களுடன் கெத்தாக படம் பிடித்து ரீல்ஸ் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த இளைஞர்கள், தங்களை பார்த்து மற்றவர்கள் பயப்பட வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் புகழ் தேடும் ஆசையில், சட்டத்தை மீறி ஆயுதங்களை கையில் ஏந்தி புகைப்படம் எடுத்து பதிவிட்டதற்காக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் அதன் மூலம் ஏற்படும் தவறான செயல்கள் குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.