
சிகாகோ நகரில் 34 வயதாகும் அமி கேன் என்ற பெண் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது எடை 136 கிலோவாக இருப்பதால் உடல் எடையை குறைக்கும் நோக்கில் ஒசெம்பிக் போன்ற மருந்துகளை பயன்படுத்தினார். அதன் மூலம் அவர் 136 கிலோவில் இருந்து 61 கிலோவிற்கு எடை குறைந்துள்ளார். அதோடு அவர் உடல் அளவை 24 இல் இருந்து 4 மாற்றியுள்ளார். இந்த மாற்றம் அவருக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஆனாலும் இந்த வேகமான எடை இழப்பு அவரது உடலில் அதிகப்படியான தோல் சுருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஒசெம்பிக் வெகோவி போன்ற மருந்துகளை பயன்படுத்துவதால் வயிற்று பகுதியில் பக்க விளைவுகள் ஏற்படுகிறது என்று கேன் தனது அனுபவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த தோல் சுருக்கத்தை குறைப்பதற்காக இவர் தினசரி மாய்ச்சரை பயன்படுத்தி சூடு மற்றும் குளிர் சிகிச்சைகளைக் கொண்ட நீவ்ஸ்கின் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு உடல் எடை குறைப்பதில் பல்வேறு சவால்கள் இருந்தாலும் தனது ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது என்பதை அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய உடல் உருவத்துக்கு ஏற்றவாறு ஆடைகளை தேர்ந்தெடுப்பது அவருக்கு நம்பிக்கையை அளித்துள்ளது என அவர் கூறியுள்ளார்.