இணையதளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், ஒரு பள்ளியில் கிறிஸ்மஸ் விழா நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர் மேடையில் நிற்கின்றார். அதன் பின் அவரது ஆசிரியரும் நிற்கின்றார். அப்போது அந்தப் பெண் மைக்கை வாங்கிக்கொண்டு, நான் என்னைப் பற்றியும் என் வகுப்பில் இருக்கும் எனது நண்பர்கள் பற்றியும் மிகவும் பெருமை அடைகிறேன் என்று பேச தொடங்குகிறார். அதன் பின் ஒரு சிறுவனைத் தவிர என் வகுப்பு மிகவும் அழகாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார். இதைத்தொடர்ந்து கீழே அமர்ந்திருந்தவர்கள் சிரிக்கத் தொடங்குகின்றனர்.

உடனே அந்த சிறுமியின் பின்னால் நின்று கொண்டிருந்த ஆசிரியர் அவர் கையில் இருந்த மைக்கை வாங்குகின்றார். அதன் பின் அந்தச் சிறுமி சிரித்துக்கொண்டே மேடையை விட்டு கீழே இறங்குகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மகிழ்ச்சியான சூழ்நிலையையும், பெண்ணின் தன்னம்பிக்கையும் வெளியிப்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. பார்வையாளர்கள் சிறுமியின் நடத்தையை பாராட்டினர்.