
சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்று உள்ளது. அங்கு சம்பவ நாளன்று பணியாளர்கள் அழகு நிலையத்தை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். மீண்டும் மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையனுள்ளே பொருட்கள் சிதறி ஆங்காங்கே கிடந்துள்ளன. இதனை கண்ட பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ள காவல்துறைக்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் கடையை சோதனை நடத்திய போது திடீரென யாரோ குறட்டை விடுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனால் மாடியில் சென்று பார்த்த போது அங்கு ஒரு இளைஞர் போதையில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
அவரைத் தட்டி எழுப்பிய காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் கிஷோர் என்பதும், அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் கடையை கொள்ளை அடிப்பதற்காக பூட்டை உடைத்து கடையை திறந்து உள்ளார். ஆனால் கடையில் எந்த பணமும் கிடைக்கவில்லை எனவே போதையில் மாடியில் சென்று தூங்கி உள்ளதாக கூறியுள்ளார். இதன் பின்னர் கிஷோரை கைது செய்த காவல்துறையினர். காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று வேறு ஏதேனும் கடைகளில் திருடி உள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்துகின்றனர்.