மாணவரின் முழுமையான வளர்ச்சிக்கு பயன்படும் அறிவியல் சார்ந்த செயல்பாடுகளை அறிவியல் மன்றம் மேற்கொண்டு வருகிறது. அதன் பொது நோக்கங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.

மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்.

அறிவியல் முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறனை வளர்த்துக் கொள்வதில் பயிற்சி வழங்குதல்.

ஆராயும் திறனையும் படைப்பாற்றல் திறனையும் வளர்த்தல்.
0
பயனுள்ள அறிவியல் பொழுதுபோக்கு வேலைகளில் ஈடுபடும் ஆர்வத்தை வளர்த்தல்.

அறிவியல் அறிவை வாழ்க்கை சூழலில் பயன்படுத்தக்கூடிய திறனை மாணவர்களின் மத்தியில் உருவாக்குதல்.

நல்ல காரியங்களை செய்து முடிப்பதில் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்த்தல்.

நவீன கால அறிவியல் வளர்ச்சிகளையும் மனித வாழ்வில் அவைகளின் பாசங்களையும் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பு வழங்குதல்.

அருகில் இருக்கக்கூடிய பிற பள்ளிகளில் செயல்படும் அறிவியல் மன்றங்களுடன் தொடர்பு கொண்டு அறிவியல் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் திறனை வளர்த்தல் ஆகியவை அறிவியல் மன்றத்தின் பொது நோக்கங்கள் ஆகும்.