உத்தரப் பிரதேசம் ஹாபூரில் உள்ள சிஜார்சி சுங்கச்சாவடியில் பணியில் இருந்த ஊழியரை பெண் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது காரில் ஞாபூர் வழியாக வந்த அந்த பெண், சுங்கச்சாவடிக்குள் வந்தபோது அவருடைய பாஸ்ட்டேக்  பணம் முடிந்ததால் ஊழியர் பணம் கேட்டுள்ளார். அதனால் அந்த பெண் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென  வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்தப் பெண் கவுண்டருக்குள்  நேரடியாக நுழைந்து ஊழியரை அடித்தார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும், மற்றொரு புகைப்படத்தில் டோல் ஊழியர்கள் பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொள்வது போன்ற காட்சியும் பரவியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு சுங்கச்சாவடி ஊழியர்கள் அந்த பெண்ணுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

தற்போது வரை எந்த ஒரு புகாரும் வரவில்லை எனவும், புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.