மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு கால்வாய் கட்டுவது தொடர்பான பிரச்சனைக்காக பாஜக பெண் கவுன்சிலரின் கணவரான அர்ஜுன் குப்தா என்பவர் விசாரணைக்கு வந்த நிலையில் போலீஸ்காரர்களை மிரட்டும் விதமாக பேசினார். அதாவது விசாரணையின் போது எஸ்ஐ வினோத் மிஸ்ராவுக்கும், அர்ஜுன் குப்தாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அர்ஜுன் குப்தா எஸ்ஐ யூனிபார்மை கழட்டி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பொறுமையை இழந்த வினோத் நீ என்ன கழட்றது. நானே என்னோட யூனிஃபார்மை கழட்றேன் என்று கூறி சட்டையை கழற்றி வீசினார். அவரை சக காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.