செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  ஒரு பக்கம் மோடியின்‌ உடைய டெவெலப் மென்ட் மாடல்.  இன்னொரு பக்கம் பாரதிய ஜனதா கட்சியின் தனித்துவம். அதைதாண்டி  உதயநிதி ஸ்டாலின் வந்த பிறகு ஐடியாலஜிக்காக பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சி ரொம்ப அதிகம். ஏன்னா ஃபேமிலி politics என்று நான் சொல்லுவது நிரூபணமாகிட்டே இருக்கு.

ஒவ்வொரு நாளும் குடும்ப அரசியல் என்று சொல்லும் போது மக்கள் பாக்குறாங்க. இரண்டாவது தகுதியில்லாத,  திறமையில்லாத மனிதர்கள் எப்படி குடும்ப அரசியல் மூலமாக அமைச்சர்கள் ஆகிறார்கள். இது எல்லா மனிதர்களுக்கும் எதிரானது என்று சொல்லும் போது,  இளைஞர்கள் அதை ரசிக்கிறார்கள், கேட்கிறார்கள். அதை மாற்றணும்னு நினைக்கிறாங்க.

மூன்றாவது சாதனதர்மத்திற்கு ஆதரவாகவோ,  எதிராகவோ எந்த வேலையும் செய்யாமல்,  மைக்கில் மட்டும் இருக்கிறேன் என்று சொல்லும் போது அதையும் பார்த்து மக்கள் வராங்க. அதனால் அப்படி பேசிக்கிட்டே தான் இருக்கனும். அந்த பேச்சை அவர் நிறுத்தவே கூடாது, பாராளுமன்ற தேர்தலில் அதை நீங்கள் பார்ப்பீர்கள் என தெரிவித்தார்.