
செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, சிப்கார்ட் விரிவாக்கத்திற்கு எங்களது நிலங்களை தர விரும்பவில்லை என்கின்ற உழவர்களின் உடைய போராட்டம் என்பது காவல்துறையைக் கொண்டு அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கே போராடுகின்ற உழவர்கள் தங்களது நிலத்தில் அமைதியான முறையில்,
ஜனநாயக வழியில் எதிர்ப்பை தெரிவித்த அரங்கு என்பது அடக்கு முறையால் கலைக்கப்பட்டு, உழவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படி போராடக்கூடிய உழவர்களை கைது செய்வதால், ஜனநாயக முறையில்… அமைதி வழியில்…. போராடக்கூடியவர்களை கைது செய்வதால் எதையும் சாதித்து விட முடியாது.
தங்கள் நிலத்தை தர வேண்டாம் என்று உழவர் முடிவு செய்துவிட்டார்கள் என்றால், அவரிடம் வலுக்கட்டாயமாக நிலத்தை புடுங்க வேண்டிய தேவை கிடையாது. இன்றைக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. என்எல்சிக்கு நிலத்தை கொடுத்தவர்களுக்கு 60 ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் பட்டா கொடுத்திருக்கிறார்கள். முதலமைச்சர் கொடுத்திருக்கிறார். முதலமைச்சருக்கு அதற்க்கு நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம் என தெரிவித்தார்.