செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  அம்மாவுக்கு கொடுத்தது கடன் இல்லங்க.. அய்ய என்னங்க இது... மறுபடி மறுபடி  பல கூட்டத்தில்  முழுமையாக விளக்கம் தந்திருக்கேன். சொல்றத கேளுங்கள் பொதுக்குழுவிலே வாசிச்சு இருக்கேன். முழுமையாக நல்லா கேட்டுக்கோங்க. மாண்புமிகு அம்மா அவர்கள், அவருக்கு இரண்டு கோடி ரூபாய் ரெக்கார்ட் பூர்வமாக கட்ட வேண்டியது இருந்தது. புரிஞ்சுகிட்டீங்களா? அதை கேட்டாரு.

கட்சி ஃபண்ட்ல இருந்து கொடுங்க பன்னீர்செல்வம்.  நான் ஒரு வருடத்துல அதை திருப்பி கொடுத்துவிடுவேன் என்று சொன்னார்கள். நான் காசோலையாக கொடுத்தேன். கொடுத்ததும், அதற்கு அடுத்து நடை பெற்ற பொதுக்குழுவில் நான் வாசித்து இருக்கிறேன். பொருளாளர்  என்ற முறையில், அந்த வரவு செலவு வரும்போது  மாண்புமிகு அம்மா அவர்களுக்கு, இரண்டு கோடி ரூபாய் காசோலை மூலம் தந்ததை வாசித்திருக்கிறேன்.

மீண்டும் மாண்புமிகு அம்மாவை, பொதுக்குழு முடிந்த போது கொடுத்துட்டாங்க. செக்காவே கொடுத்து, அது வரவு ஆயிடுச்சு அக்கவுண்ட்ல. ‌அதுக்கு அடுத்து நடந்த பொதுக்குழுவுலயும், நான் வாசிச்சு இருக்கிறேன்.பொருளாளர்  என்ற முறையில், வரவு செலவு தாக்கல் செய்யும் போது வாசிச்சு இருக்கேன்.

நான் கட்சியில் இருந்து, நான் கொடுத்ததையும் பொதுக்குழுவில் வாசித்திருக்கிறேன். திரும்பவும், அம்மா அவர்கள் திருப்பி செலுத்தியதையும் நான் பொதுக்குழுவில் வாசித்து இருக்கிறேன். இவ்வளவும், பத்திரிக்கை, தொலைக்காட்சி நண்பர்கள் அனைவருக்கும் தெரியும்.அவங்க பொறுப்பேற்றது முதல் அண்ணன் சீனிவாசன் பொருளாளர் ஆக தேர்வானத்தில் இருந்து வரவு – செலவு கணக்கை நாங்கள் கோர்ட்  மூலமாக கேட்கப் போகிறோம். அதற்கு அவர்கள் தக்க பதில் சொல்லியாக வேண்டும் என தெரிவித்தார்.