
நீலகிரி, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிக்கப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், நடைமுறை சிக்கல்களை உரிய தரவுகளோடு மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மேலும், ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் விருப்பம் போல பயணம் செய்யும் வகையில் 10 பேருந்துகள் இயக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்ததற்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.