வாசீம்அக்ரம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சிறந்த பந்துவீச்சாளர். கிரிக்கெட் தொகுப்பாளர், தொலைக்காட்சி பிரபலமானவர். பாகிஸ்தான் அணியின் ஒருநாள் போட்டி மற்றும் தொடர் போட்டிகளில் கேப்டனாக வழி நடத்தி சென்றவர். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணியின் ஒருநாள் தொடர் போட்டியில் கிரிக்கெட் வர்ணனையாளராக பேசிய இவர் தான் வளர்க்கும் பூனை குறித்து சுவாரசியமான தகவலை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, எனது பூனைக்கு முடி வெட்டுவதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு சலூனுக்கு சென்றேன். அங்கு பூனைக்கு முதலில் மயக்கம் மருந்து கொடுத்தார்கள் பிறகு உணவு கொடுத்தார்கள் பின்னால் முடியை சரி செய்தார்கள். இதற்கு பில் பாகிஸ்தான் மதிப்பின்படி ரூபாய் 1.83 லட்சம் (இந்திய மதிப்பின்படி 55 ஆயிரம் ரூபாய்) எனக்கு முடி வெட்டுவதற்கு கூட இவ்வளவு செலவு செய்ததில்லை எனக் கூறி சிரித்தார்.

இந்த பணத்திற்கு பாகிஸ்தானில் 200 பூனைகளை வாங்கி நான் வளர்த்து விடுவேன் எனவும் சக வர்ணனையாளர்களிடம் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியில் இருந்த சக வர்ணனையாளர்களிடம் தான் சலூனுக்கு சென்று வந்த பில் கணக்கை மொபைல் மூலம் காட்டினார். இந்த பில்லை கேமரா முன் சக வர்ணனையாளர் காட்டினார். இதில் முடி வெட்டுவதற்கு வெறும் 7,300 இருந்தது. மீதமுள்ள ரூபாய் பூனையின் மருத்துவ செலவு ஆகும். இதைப் பார்த்து அதிர்ச்சியில் அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.