
தமிழக முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நடிகர் விஜய் தலைமையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப்பொருள் தடுப்பு குறிக்கும் பேசி இருந்தார். இதையெல்லாம் பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. முன்னதாக பாடகி சுசித்ரா அவர் மீது குற்றச்சாட்டு வைத்தார்.
விஜய் அவரது வீட்டு விசேஷங்களில்,சக நடிகர் மற்றும் நடிகைகளுக்கு வெள்ளி தட்டில் விலை உயர்ந்த போதைப் பொருள்கள் வைத்து கொடுப்பார் என்று கூறினார். இதற்கு விஜய் அமைதியாக இருக்கிறார். காவல்துறையினரும் விஜய் மீதும், நடிகை திரிஷா மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?. இப்படிப்பட்ட சூழலில் விஜய் அரசியலுக்கு வந்து போதைப் பொருள் குறித்து பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.