
திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், ஏன் அவர்களுக்கு நீட் பிடிக்கிறது. ஒன்றும் கிடையாது, சனாதனம். இவ்வளவு வருஷம் படிக்காம இருந்த இல்ல… நாங்க மட்டும் தானே படிச்சோம் என நினைக்கின்றார்கள். ஒரு பெரிய பரதநாட்டிய கலைஞர், சென்னையில் இருக்காங்க… அந்த அம்மாவுக்கு வயசு ஆயிடுச்சு. அது சொல்லுது… சனாதானத்தில் என்ன தப்பு இருக்கு ? சனாதானம் தான் சிறந்தது. அந்த காலத்துல பாத்தீங்கன்னா…
அவாவா குலத்தொழில் பார்த்தா… எங்க வீட்ல வந்து வேலை செய்வதற்கு அவாவா பையனை விட்டுட்டு போய்டுவா… வெறும் சோறு தான் போடுவோம். அவ்வளவு வேலைக்கு ஆள் இருக்கு. இப்ப வேலைக்கு ஆளே இல்லை. எல்லாம் படிக்கிறான், படிச்சிட்டு என்ன பண்றான் ? பெரிய பெரிய வேலைக்கு போறான்… இதனால்தான் சனாதானம் வரணும். எங்களுக்கு எப்படி இருக்கும் ?
இவ்வளவு வருஷமா வந்து, எங்களை படிக்க விடாமல்… இருட்டறையில் வைத்துவிட்டு, உங்களை சாமி சாமி சாமி என்று கூப்பிட வச்சு, ஒண்ணுமே செய்யாம வச்சிருக்கீங்களே… இன்று பெரியார் வந்தார். எங்களை படிக்க வைத்தார், அண்ணா வந்தார் புரட்சி செய்தார், கலைஞர் வந்தார் ஊரெங்கும் பள்ளிகளை திறந்தார். என்ன பிரச்சனை இப்போ ? உத்தரபிரதேஷ் போங்க….
அங்க அரசாங்கம் கல்வியை பற்றி கவலையே படுவது கிடையாது. சூத்திரர்கள் எல்லாம் படிக்கவே கூடாது, அந்தணர்கள் மட்டும் படித்தால் போதும். ஆனால் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், தளபதியும் என்ன பண்றாங்க ? நம் தமிழ்நாட்டு மக்கள் படிக்க வேண்டும்… படிக்க வேண்டும்… என்று தான் ஸ்டேட் போர்டு ஸ்கூல், எல்லா இடத்திலும் இருக்கு. என்ன ஆச்சு ? கட் ஆப் சொன்னிங்க…
நூற்றுக்கு நூறா..? நான் 99 சதவீதம் வாங்குறேன்… 100 சதவீதம் வாங்குறேன் என சொன்னாங்க. நம்ம மக்கள் வாங்குனாங்க. ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னடா… சூத்திரன் படிக்க வந்துட்டானே.. சூத்திரர் மருத்துவர் ஆயிட்டானே… என்ன பண்றது நம்ம ஆட்கள் படிக்க முடியலையே… அதற்காக ஏதாவது செய்ய வேண்டும். சொல்வார்கள் ஆங்கிலத்தில்…. ஒரு இலக்கை அறிவிக்கிறார் ( கோல் போஸ்ட்) நாம் கோல் போஸ்டர் பக்கத்துல போகும் போது… கோல் போஸ்டை அகற்றி விட்டு நீட் என்ற கொடியை வைத்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.