
அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற நாளிலிருந்து அதிரடியாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவரது அனைத்து நடவடிக்கைகளும் உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி மீதான வரிவிதிப்பு, சட்டவிரோதக் குடியேறிகளின் நாடு கடத்தும் உத்தரவு, காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகுதல், காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை தற்காலிகமாக வெளியேற்றுதல், திருநங்கைகளுக்கான தடை உத்தரவு, உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகல் போன்று தொடர்ந்து அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் ட்ரம்பின் அனைத்து உத்தரவுகளை எதிர்த்து அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் பிலடெல்பியா, கலிபோர்னியா, மிக்சிகன், டெக்சாஸ், விஸ்கான்சின் போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ட்ரம்புக்கு எதிராக பதாகைகள் ஏந்திய படி முழக்கங்கள் எழுப்பினர். அரசின் செயல்திட்டம் 2025 ஆகியவற்றுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் கண்டன பதாகைகளுடன் பேரணியாக சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.