சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணின் பையை பறிக்க வந்த திருடன், அந்த பையோடு தனது இதயத்தையும் இழந்து விடுகிறான் என்ற கற்பனைக்கதையை நினைவுபடுத்தும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், முதலில் திருடன் பையை பறிக்க முயற்சிக்கிறார். பெண் அதை எதிர்த்துப் போராடுகிறார்.

ஆனால், பையை பறித்தவுடன் திருடன் பெண்ணின் சோகமான முகத்தைப் பார்த்து உருகி, திரும்பி வந்து பையை திருப்பி கொடுக்கிறார். அப்போது அவர்கள் கண்கள் சந்திக்க, அதே நொடியில் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது, பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் அணைத்துப் பாசத்துடன் முத்தமிடுகிறார்கள்.

 

இந்த வித்தியாசமான காதல் வீடியோவை 5.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். X தளத்தில் @kawaii_mariie என்ற பயனர் இதைப் பகிர்ந்துள்ளார். பலரும் “இதுபோல எங்களுக்கும் காதல் நடக்காதே!” என கலாய்த்து கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் “நாளை முதல் நானும் திருட தான் போறேன்” என கூறியுள்ளனர்.

உண்மையா, இல்லையா என சந்தேகங்கள் இருந்தாலும், இந்த வீடியோ நெட்டிசன்களுக்கு சிரிப்பும் சிந்தனையும் கொடுத்திருக்கிறது. “காதலுக்குத் எல்லைகள் இல்லை” எனும் பழமொழியை இந்த வீடியோ மீண்டும் நினைவுபடுத்துகிறது.