
கோலிவுட்டின் முன்னணி நடிகைகளான நயன்தாரா மற்றும் த்ரிஷா கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரைத்துறையில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர்கள். இவர்களுக்கிடையேயான போட்டி மற்றும் இடையூறு குறித்து பல காலமாகவே சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், நயன்தாரா கடந்த 2000-களில் விஜய் டிவிக்கு அளித்த ஒரு பழைய பேட்டியில், த்ரிஷாவுடன் ஏற்பட்டதாக கூறப்படும் பிரச்சனை குறித்து தெளிவாக பேசியிருந்தது தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த பேட்டியில் நயன்தாரா, “நான் அளிக்கும் பேட்டிகளில் பேச வேண்டிய விஷயம் இருக்கும்போது மட்டுமே பேசுகிறேன். இல்லையெனில் தேவையில்லாத பேட்டிகள் ஏன்? இதனால் சிலர் என்னை சுயநலம் கொண்டவர் எனக் கருதுகிறார்கள், ஆனால் எனக்கு எதிலும் பிரச்சனை இல்லை” என தெரிவித்துள்ளார். மேலும், த்ரிஷா மற்றும் ஷ்ரேயா சாரனுடன் நட்பா? என்ற கேள்விக்கு, “நட்பு என்பது இப்படி எளிதாகப் பேசும் வார்த்தை இல்லை.
நான் த்ரிஷாவுடன் நட்பில் இல்லை. எங்களுக்கு சில பிரச்சனைகள் இருந்திருக்கலாம். ஆனால் அது செய்திகளில் வர வேண்டிய அளவுக்கு பெரியது இல்லை. யாருக்காவது நான் பிடிக்கவில்லை என்றால், எனக்கும் அவர்களை பிடிக்காது.” என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘பில்லா’ படத்தில் நடித்த நமிதாவுடன் ஏற்பட்ட பிரச்சனை குறித்து அவர் சொன்னது, “தொடக்க நாட்களில் நமிதாவுடன் நன்றாகவே பேசினேன். ஆனால் ஒருநாள் அவர் என்னிடம் பேசுவதை நிறுத்தினார்.
மற்றவர்களிடம் ‘ஹாய்’ சொல்லுவார், ஆனால் என்னை தவிர்த்தார். என்ன பிரச்சனை என்பது எனக்குத் தெரியாது. அவர்களுக்கு ஏதும் இருந்தால், அது அவர்களுடைய பிரச்சனை” என நயன்தாரா சுட்டிக்காட்டியிருந்தார். இந்த பேட்டியில், தனது நேர்மையான எண்ணங்களை பகிர்ந்த நயன்தாரா, த்ரிஷாவுக்கும், எனக்கும் போட்டி இருப்பதாக கூறும் செய்திகளை வெறும் ஊடகத் தூண்டுதலாகவே பார்த்ததாகவும் தெரிவித்திருந்தார்.