
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்தாய் வாழ்த்தில் உள்ள வரிகள் எல்லாம் எங்கே போனது. 10-க்கும் மேற்பட்ட வரிகளை அவர்கள் எடுத்து விட்டனர், அதனால் நான் மொத்தமாக பாட்டையே எடுத்து விட்டேன். நான் ஆட்சிக்கு வந்தால், தாத்தா புரட்சி பாவலர் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக போடுவேன். அந்தப் பாட்டை போட்டுக் கொண்டு இருக்கிறேன், அதில் உங்களுக்கு எதுவும் பிரச்சனையா?.
அரசு விழாவில் நீங்கள் போடாமல் இருங்கள், இது பொதுவிழா, இதில் ஏன் போட வேண்டும். நான் இங்கிலீஷ் தமிழ் தாய் வாழ்த்து பாட்டு போடவில்லை, இந்தி தாய் வாழ்த்து போடவில்லை, தமிழ் தாய் வாழ்த்து தான் போட்டேன். தூய தமிழில் எங்கள் புரட்சி பாவலர் பாடிய பாடலை தான் போட்டேன், ரவீந்திரநாத் தாகூர் பாட்டை போடவில்லை. உங்களுக்கு இதில் என்ன பிரச்சனை அந்தப் பாட்டை போட்டதால் கொட்டகை பற்றி எரிந்து விட்டதா? அல்லது பல பேர் இறந்து விட்டார்களா? அப்படி ஏதும் நடக்கவில்லை என்று கூறினார்.