இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் இதனை பயன்படுத்திக் கொண்டு மோசடிக்காரர்கள் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருவதால் மக்கள் பலரும் ஏமாந்து விடுகின்றனர். இது தொடர்பாக அரசு என்னதான் விழிப்புடன் இருக்க மக்களை அறிவுறுத்தி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினமும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி பல மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு சிபிஐ தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது சிபிஐ சின்னத்தையும் அதிகாரிகள் பெயர்களையும் பயன்படுத்தி மர்ம நபர்கள் போலி ஆவணம் தயாரித்து சம்மன் அனுப்புவதாகவும் whatsapp அழைப்பு மேற்கொண்டு மிரட்டி பணம் பறிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனால் போலி நபர்களிடம் ஏமாறாமல் இருக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சிபிஐ சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.