உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவித அப்டேட்டுகளை நிறுவனம் வழங்கி வருகிறது. அதன்படி தற்போது drawing கருவியில் மூன்று புதிய அம்சங்கள் அறிமுகமாக உள்ளதாக WABetaInfo தகவல் தெரிவித்துள்ளது. அது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலாவது அம்சமாக நீங்கள் டைப் செய்யும் போது கீ போர்டுக்கு மேற்பாக்கத்தில் உங்களுக்கு பிடித்த font styleதேர்வு செய்து கொள்வதற்கான வசதிகள் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்களின் மெசேஜை வலது, இடது மற்றும் மையம் ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்து align செய்வதற்கான அம்சமும் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதனைப் போலவே உங்களின் text background சுலபமாக மாற்றுவதற்கான வசதிகளும் கொண்டு வரப்பட உள்ளன. இதனைப் பயன்படுத்தி முக்கியமான மெசேஜை தெளிவுபடுத்தி காண முடியும். இந்த மூன்று புதிய அம்சங்களும் விரைவில் whatsapp பயனர்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.