
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான whatsapp செயலியை உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக whatsapp செயலியில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் ஸ்பேம் மெசேஜ்களை தவிர்க்கும் பொருட்டு புதிய அப்டேட் வெளியிடப்பட்டது. அதேபோன்று instagram செயலியில் இருக்கும் அப்டேட்டுகளும் whatsapp இல் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
மீண்டும் ஒரு புதிய அப்டேட்டை வாட்ஸ் அப்பில் மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாட்ஸ் அப்பில் custom lists என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் வாட்ஸ் அப் சாட்டுகளை குடும்பம், நண்பர்கள் என தனித்தனியாக பிரித்து ஒருங்கிணைக்கும் வகையில் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் chat screen-ல்+ஐகானை கிளிக் செய்து லிஸ்ட்டை உருவாக்க முடியும்.