செங்கல்பட்டு மாவட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசியும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் ஹாக் செய்யப்பட்டதால் காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தொலைபேசி whatsapp எண்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் குரூப் தகவல்கள் வந்துள்ளன. அதனை காவலர்கள் திறந்து பார்த்தபோது அதில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் தொலைபேசி எண்கள் சேர்க்கப்பட்டிருந்தது.

மேலும் அந்த குரூப்பில் உள்ள pdf பைல் மற்றும் யோனோ ஆப்பை பதிவிறக்கம் செய்தால் அவர்களின் வங்கிக் கணக்கில் 6370 ரூபாய் வரவு வைக்கப்படும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை நம்பி காவல் துறை அதிகாரிகள் சிலர் அந்த ஆப் மற்றும் pdf பைல்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். அடுத்த ஒரு நொடியில் பதிவிறக்கம் செய்த காவல்துறையினரின் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோனதால் காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.