நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் பற்றி அவதூறாக பேசி வருவதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி சீமானை சரமாரியாக விமர்சித்துள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர். இந்நிலையில் சீமான் பற்றிய ராஜீவ் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, சீமான் சமஸ்கிருத திணிப்பை விட ஹிந்தி திணிப்பை விட கொடிய திணிப்பு பெரியார் திணிப்பு என்று கூறி வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

தமிழகத்தில் சமஸ்கிருதம் படித்தால் தான் டாக்டர் ஆக முடியும் என்ற நிலை இருந்ததோடு சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் உருவானது என்று கூறப்பட்டது. அப்போது தமிழ் தனி மொழி என்று அரசியல் களத்தில் நிரூபித்துக் காட்டியவர் தந்தை பெரியார். இந்நிலையில் சீமானின் whatsapp ஸ்டேட்டஸ் ஐ பார்க்கும்போது அவர் ஆர்எஸ்எஸ்-ஐ விட ஆபத்தானவர் என்பது தெரிகிறது.

இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைக்கூலியாக இருந்து கொண்டு இந்திய அரசியலில் தமிழ்நாடு தமிழர் அரசியல் மற்றும் ஈழ விடுதலையில் தேசிய இன உரிமை என அத்தனையும் காட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் எங்களைப் போன்ற இளைஞர்களின் அறிவு பொருளாதாரம் மற்றும் உழைப்பு போன்றவற்றை சுரண்டியதோடு இன்னும் எத்தனையோ இளைஞர்களை இது போன்ற கட்டுக் கதைகளை கூறி நம்ப வைத்து அவர்களையும் சுரண்டி கொண்டிருக்கிறார் என்று கூறினார்.