ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவருமே வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இதை குறிவைத்து மோசடிகள் அரங்கேறுகிறது. தற்போது அரங்கேறும் புது வகை மோசடி என்னவெனில் உங்களது வாட்ஸ்அப் கணக்கிற்கு வெளிநாட்டு எண் (அ) வித்தியாசமான எண்ணில் இருந்து யூடியூப் வீடியோக்களுக்கு லைக் இடுவதன் வாயிலாக தினசரி 1000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என மெசேஜ் வரும்.

இந்த பகுதி நேர வேலையை செய்வதன் வாயிலாக தினசரி குறிப்பிட்ட தொகையை சம்பாதிக்க முடியும் என்று பேசி மோசடி செய்ய முயற்சிப்பார்கள். அதனை ஏற்றுக்கொள்பவர்களிடம் குறிப்பிட்ட வேலையை கொடுத்து முடிக்க சொல்வர்கள். இதையடுத்து உங்களிடம் டெலிகிராமில் உரையாட  ஆரம்பிப்பார்கள். ஆகவே டெலிகிராமிலேயே இதுபோன்ற மோசடிகளை தற்போது அரங்கேற்றுகின்றனர்.

டெலிகிராமில் உங்களுடைய வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை கேட்பர். இதுபோன்ற மோசடிகளில் பயனாளர்கள் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்களது தனிப்பட்ட தகவல்களை ஆன்லைன் வாயிலாக தெரியாத நபர்களுக்கு கொடுக்காதீர்கள். அவ்வாறு தனிப்பட்ட தகவல்களைக் கொடுக்காமல், மோசடி நபர்கள் அனுப்பும் லிங்க்குகளை கிளிக் செய்யாமல் இருந்தாலே பெரும்பான்மையான ஆன்லைன் மோசடிகளில் இருந்து நாம் தப்பிவிடலாம்.