
கோவை மாவட்டம் நடுப்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வீட்டிற்கு பெயிண்டர் அடிப்பதற்காக சகாயராஜ் என்பவரை அழைத்துள்ளார். இதையடுத்து மறுநாள் செல்வராஜின் மருமகள் பீரோவை திறந்து நகைகளை பார்த்துள்ளார். அப்போது தங்க செயின், மோதிரம், கம்மல் உட்பட 3 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து பதறிப்போன அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கொள்ளை நடந்த வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சகாயராஜ்(30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அதன்பின் அவரிடம் இருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆதார் படுத்தி சிறையில் அடைத்தனர்.