
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு வருகிற 23ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் அடுத்த வருடம் ஜனவரியில் மாநாடு நடைபெறும் என்று தகவல் வெளியான நிலையில் செப்டம்பர் 23 இல் தான் மாநாடு என்பது உறுதியாகியுள்ளது. அதாவது சுவர் ஓவியங்களில் செப்டம்பர் 23 இல் நடைபெறும் மாநாடு என்று எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநாடு நடக்கும் தேதி உறுதியானது. இது தொடர்பான அறிவிப்பு இன்று காலை 11 மணியளவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விழுப்புரம் எஸ்பி விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி வழங்கிய நிலையில் அதற்கான இடத்தை தேர்வு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் 50,000 மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டியில் தற்போது மாநாட்டு காண முதல் கட்ட பணியாக சுவர் விளம்பரம் செய்யும் பணிகளில் கட்சி ஈடுபட்டுள்ளது. அதன்படி விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடிகர் விஜயை வரவேற்றும் கட்சியின் மாநாட்டை பெருமைப்படுத்தியும் சுவர் ஓவியங்கள் மற்றும் விளம்பரங்கள் வரையும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் விக்கிரவாண்டியில் சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் காவல்துறையினரின் 33 நிபந்தனைகளுடன் மாநாடு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.