தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது “கங்குவா” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சூர்யா 10 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. நடிகர் சூர்யாவுடன் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பதானி மற்றும் நடிகர் பாபி டியோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 26ம் தேதி நடைபெறும் என்று பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரித்ததோடு, 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இந்த படம் தமிழ், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகயுள்ளது.