நாம் தமிழர் கட்சி சார்பில் சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த மடப்பய மக்களுக்கு எங்க புரிய போகுது ? இவங்க பிறந்தநாள் கொண்டாடுவாங்க…  ஒரு கோடி தொண்டன் என்பாங்க... ஏண்டா ஒரு கோடி தொண்டன் கிட்ட ஆளுக்கு ஒரு மரக்கன்று கொடுத்து, நட்டா ?  ஒரு கோடி மரம் வந்துரும்டா… பைத்தியக்கார பயலுக.

இந்த பூமியை பச்சை போர்வையாக போதித்திருக்கலாம்டா….  பச்ச பசேர்னு என் நாடு. கேரளாவுக்கு போ, வானூர்தில போகும்போது குனிஞ்சு பாரு,  எல்லாம் பச்சையா இருக்கும். அங்கங்க சின்ன சின்ன கட்டடங்கள் தெரியும். ஏன் ஊருக்கு வா…  அங்கங்க சின்னதா பச்சைத் தெரியும், பூரா கட்டடமா தெரியும்.  பைத்தியக்கார பயலுக….

ஒருநாள் பாரதி கடும் கோவத்துக்குள்ளகிட்டான். வெறுப்பாகி, எல்லா பயலும் கோவில்ல போய் எனக்கு நல்ல புத்தியை கொடு, எனக்கு அறிவை கொடு அப்படிதானே வேண்டுவான்… இவன்  டென்ஷன் ஆகிட்டான். போய் ஹேய்…இங்க வா… என்னை எதுக்கு இவ்வளவு அறிவோட படைச்ச. எனக்கு எதுக்கு இவ்வளவு…

பூரா பயலும் முட்டாள் புயலாக இருக்கான்.  என்னை மட்டும் அறிவாளியா படச்சுவிட்ட…  நான் என்ன பேசினாலும் உனக்கு புரிய மாட்டேங்குது,  எப்படி பேசாம இருப்பேன்…  சொல்லுடி சிவசக்தி,  என்னை சுடர்மிகு அறிவுடன் ஏன் படைத்தாய் சொல். என்ன எதுக்கு எவ்வளவு அறிவை கொடுத்த என கேட்டுட்டான். அந்த மாதிரி நம்ம ஊரு கூட்டத்துல பிறந்துட்டோம் பாத்துக்க… இவனுக்கு என்ன செய்றதுன்னே தெரியாது ?

எல்லாம் சரிதான்…  ஆனால் என்ன கொடுத்த ? – அப்படின்னு கேட்பான். என் பங்காளி வடிவேலு சொல்ற மாதிரி…  பாக்கெட்டை எப்படி எடுத்துவிட்டு கேஸ் நகி ஹே. இருந்தா தானே கொடுக்கிறதுக்கு…  அது ஒன்னும் இல்ல. நான் கொடுப்பேன்…  உலக தரத்திற்கு ஆகச்சிறந்த கல்வியை ஏழை – பணக்காரன், உயர்ந்தவன் – தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இன்றி,  கிராமம் –  நகரம் என்ற பாகுபாடு இன்றி… எல்லோருக்கும் ஆகச் சிறந்த கல்வியை கொடுப்பேன். அறிவை வளர்க்கும் கல்வி என்பதும் மானுட உரிமை. அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை, அதை கொடுக்காமல் இருப்பது மாபெரும் கொடுமை,  அதை மாற்றுவேன்.

அடுத்து உயிர் காக்கும் மருத்துவம்….  ஒரு ரூபா மருத்துவத்தில் இருந்து ஒரு கோடி மருத்துவமனாலும் என் உறவினர்களுக்கு….  என் நாட்டின் மக்களுக்கு இலவசமான மருத்துவம்,  தரமான மருத்துவம்….  நீ இங்க இருந்து குழந்தைக்கு முடியலன்னு,  கைக்கு ஊசி போட்டு..  கை எடுத்து விடுற மருத்துவம் கிடையாது… ஆகச்சிறந்த மருத்துவம். ஏன் ?

அமைச்சர் – முதலமைச்சர் – எம்.பி – எம்.எல்.ஏ எவனுக்கும் உடம்பு முடியலனாலும்,  அரசு மருத்துவமனையில் தான் படுக்கணும்,  சட்டம் போட்டுறுவேன் ..  அரசு அலுவலர்கள், அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் பெருமக்கள் எல்லாருடைய பிள்ளைகளும் அரசு பள்ளி – கல்லூரியில தான் படுக்க வேண்டும். கல்வி தரம் உயர்ந்துவிடும்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புல இன்டர்வியூ  வருவ. நாங்க நேர்காணல் எடுக்கும்போது,  அரசு பள்ளியில் படித்திருக்கிறாயா என்று பார்ப்போம். அரசு கல்லூரியில் படித்திருக்கிறாயா என்று பார்ப்போம்.  உனக்கு வேலையில முன்னுரிமை கொடுப்போம். உனக்கு கொடுத்துட்டு மிச்சம் இருந்தால் ? தனியார் பள்ளி – கல்லூரிகளில் படிச்சவனுக்கு கொடுப்போம். இல்லனா… கிளம்புபா என சொல்லிடுவோம் என தெரிவித்தார்.