
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகி பொதுமக்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நகைச்சுவையான ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாகிஸ்தானை போலவே, பங்களாதேஷ் பகுதியிலும் வித்தியாசமான மற்றும் நகைச்சுவையை ஏற்படுத்தும் வகையில் உருவான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்த வீடியோவில், விமானம் போல வடிவமைக்கப்பட்ட ஒரு வாகனம் வீடுகளுக்குமுன் ‘லேண்ட்’ ஆகுவது போன்று இருக்கிறது. இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் சிரிப்பையும், ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அது ஒரு உண்மையான விமானம் கிடையாது. அதன் வெளிக்காட்சி, கட்டமைப்பு, மற்றும் பயணிகள் இறங்கும் படிக்கட்டுகள் போன்றவைகள் விமானம் போன்று தோற்றமளிக்கிறது.
बांग्लादेश में गजब फ्लाइट चल रही है..
पायलट सवारियों को घर तक छोड़ रहे हैं..!😁😁 pic.twitter.com/m3dkZtjSSb— Pratap Khuraw (@pratapkhuraw) April 7, 2025
அந்த வீடியோவில் ‘விமானம்’ வீதியில் நுழையும் போது சைக்கிள் ஓட்டிகள், தெருநாய்கள் என அனைவரும் இயல்பு நிலையில் உள்ளனர். விமானம் போன்ற வாகனம் நின்றவுடன், ஒரு நபர் படிக்கட்டுகளை திறந்து பயணிகளை இறக்கிவிடுகிறார். இது அந்த பகுதியில் உள்ளவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விமான சேவை நேரடியாக வீடு வரை வந்துவிட்டதா? என்று எண்ணும் அளவுக்கு அந்த நாடகம் அமைந்துள்ளது.
இது போன்ற தனித்துவமான முயற்சிகள் சமூக வலைதளங்களில் நகைச்சுவையான விமர்சனங்களை பெற்றாலும், சிலர் அவரின் திறமையை பாராட்டி வருகிறார்கள். இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஒரு பயனர் “வளர்ச்சிக்கு எல்லையே இல்ல!” என பதிவிட்டுள்ள நிலையில் மற்றொருவர் “பைலட்டோடு எனக்கு சந்திப்பு வேணும், அவர் பஸ் டிரைவராகதான் இருப்பார்!” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ 1.28 லட்சம் பார்வையாளர்களை கடந்த நிலையில் , கிராமப்புறங்களில் உள்ள கற்பனை சக்தி மற்றும் தொழில் நுட்பத்தை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.