பிரபல நடிகை சமந்தா தற்போது குணசேகரன் இயக்கத்தில் சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பிரம்மாண்ட காவியமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் சமந்தாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டாலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ஆகவில்லை.

இதனால் நடிகை சமந்தா சோகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சாகுந்தலம் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் சேர்ந்து நடித்த குழந்தை நட்சத்திரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சமந்தாவுடன் நடித்த குழந்தை பிரபல நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா. மேலும் தன்னுடைய மகளின் நடிப்பு குறித்து அல்லு அர்ஜுன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.