பெங்களூரில் உள்ள பகுதியில் சித்து(27) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி தொழிலதிபர் ஹிதேந்திரா குமார்(58) என்பவர், அந்த பெண் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். இதற்கு அந்தப் பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தொழிலதிபர், அந்த பெண்ணை நேரில் சந்திக்க விரும்பியுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் மறுநாள் பூங்காவில் சந்தித்துள்ளனர். இதனை அறிந்த அந்தப் பெண்ணின் காதலன்  பூங்காவிற்கு சென்று பார்த்துள்ளார்.

அங்கு அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த சித்து, குமரை தாக்கம் முயன்றார். முதலில் அவரது கழுத்தின் பின்பகுதியில் கத்தியை கொன்று குத்த முயன்றபோது குமார் அதனை தடுத்தார். அதன் பிறகு அவர் வயிற்றில் குத்தினார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த பெண்ணையும் சிதுவையும் போலீசார் கைது செய்தனர்.