கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டக்காடு பகுதியில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம் (56). இவர் அரசு பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தோட்ட வேலையில் 15 வருடங்களாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் சண்முகசுந்தரத்தை நன்கு தெரிந்தவர் என்பதால் அவரிடம் ஒரு உதவி கேட்டுள்ளார். சண்முகசுந்தரத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் வெளியூரில் இருப்பதாகவும் தனது மகள் பத்தாம் வகுப்பு படிப்பதால் அவளை பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு விடுமாறும் உதவி கேட்டுள்ளார்.

இதற்கு சரி என்று கூறிய சண்முகசுந்தரம் அந்தப் பெண்ணின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகளை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்ல அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சிறுமி தனது தாய்க்கு நன்கு தெரிந்த நபர் என்பதால் அவருடன் பள்ளிக்கு சென்றுள்ளார். இதேபோன்று மாலை பள்ளி முடிந்ததும் சண்முகசுந்தரம் அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்வதாக கூறி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

தனது வீட்டிற்கு அழைத்து சென்றதும் சிறுமியை  வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இதனால் பதறிய சிறுமி தனது தாயிடம் சண்முகசுந்தரத்தை பற்றி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தாய் அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சண்முகசுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.