மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் தனியார் கல்லூரி ஒன்று செயல்படுகிறது. இந்த கல்லூரிக்கு அருகிலேயே கல்லூரியின் மாணவியர் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டு அன்று விடுதியில் மாணவிகள் ஆடிப்பாடி புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்றனர். இதனால் விடுதியில் அதிக சத்தம் கேட்டுள்ளது.

இதனை கண்டிக்க அந்த விடுதி வார்டன் அங்கு சென்றுள்ளார். அப்போது மாணவி ஒருவர் வார்டனின் கையை பிடித்து நடனமாடும் படி கூறியுள்ளார். முதலில் அமைதியாக நின்றாலும் அந்த மாணவிகளின் ஆசைப்படி வார்டனும் பிரபல ஹிந்தி பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோ மாணவி ஒருவர் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது.  இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by NIDHI (@niidhi_0.0)