
பாஜகவினுடைய மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்றைய தினம் நடப்பதாக அறிவிக்கப்பட்டு, மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் இருப்பதால் அது நடைபெறாமல் போனது. தற்போது பாரதிய ஜனதா கட்சியுடைய முக்கிய தலைவர்கள் கூட்டமது கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் அடிப்படையில் வரும் ஐந்தாம் தேதி பாஜகவினுடைய மாவட்ட தலைவர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிகிறது.
மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்த கூட்டம் நடைபெற இருக்கின்றது. குறிப்பாக இந்த கூட்டத்தை பொறுத்தவரைக்கும் அதிமுக -பாரதிய ஜனதா கூட்டணி முறிவு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகின்றது. பாரதிய ஜனதாவை பொருத்தவரைக்கும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறது.
எனவே இந்த கூட்டமானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. பாஜகவின் தேசிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க இருக்கிறார்கள். இன்று நடந்த கூட்டத்திலும் கூட கூட்டணி குறித்து தலைமை தான் முடிவு எடுக்கும் என்று பேசப்பட்ட நிலையில் வருகின்ற ஐந்தாம் தேதி சென்னையில் பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருக்கின்றது.