
2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் குறித்தும், தேர்தலில் செய்ய வேண்டியவை குறித்தும் மாவட்ட செயலாளர்களோடு திமுக கட்சியினுடைய தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர்களுக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
2024இல் மக்களவை தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் தோல்வியடைந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்டாலின் கூறி இருந்தார். அந்த தொகுதியில் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் 7 பேர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் பணிகளில் தோல்வி இருந்தால் மூத்த நிர்வாகி அமைச்சராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என மு.க ஸ்டாலின் கூறியிருந்தார். 7 மாவட்ட செயலாளர்களில் 3 பேர் அமைச்சர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.