ஹரியானாவின் குருகிராமில் பாஜ்கேரா பகுதியில் மனைவியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர முடியாத கோபத்தில், 24 வயது இளைஞர் தனது மனைவியின் 10 வயது தங்கையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவு சிறுமியை மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்ற அவர், தன் அறையில் இரவு 11 மணி வரை வைத்திருந்தார்.

பின்னர் சிறுமியின் கழுத்தை நெறித்து கொன்ற பிறகு, உடலை பிளாஸ்டிக் பையில் பேக் செய்து சுமார் 1.5 கிமீ தூரத்தில் உள்ள சாக்கடை குழிக்குள் வீசியுள்ளார். குற்றவாளி கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டிருந்தாலும், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் மனைவி கடந்த ஒரு வருடமாக பெற்றோருடன் வசித்து வந்தார். மனைவி வேறு ஒருவர் திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகித்ததால், அவர் பழிவாங்கும் நோக்கத்தில் சிறுமியை குறிவைத்துள்ளார்.

சம்பவத்தன்று முதலில் மாமியாரை தாக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் தப்பித்துவிட்டார். அதனால் சிறுமியை கடத்தி இந்த கொடூர செயலைச் செய்துள்ளார். தொடர்ந்து இரண்டு நாட்கள் குழந்தையை தேடிய குடும்பத்தினர், திங்கள்கிழமை போலீசில் புகார் அளித்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட மாமனாரின் விவரங்களை மறைத்துவைத்தனர். போலீசார் விசாரணையில் உண்மை வெளிவந்தது. செவ்வாய்க்கிழமை நகரத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய உடற்கூற்று பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.