
உத்திரபிரதேச மாநிலம் லக்னோ ஜான்சியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில் தனது மனைவி தினமும் அளவுக்கு அதிகமாக குடிப்பதால் அவளை பழக்கத்தில் இருந்து மீட்க உதவி செய்ய வேண்டும் என காவல் நிலையத்தை நாடியுள்ளார். இதில் உள்ளூர் காவல் நிலையத்தில் குடும்ப ஆலோசனை மையம் வழங்கிய ஆலோசனையின் போது இந்த பிரச்சனை வெளியுலகிற்கு தெரிய வந்தது. இருப்பினும் காவல்துறையினர் தம்பதிகளின் அடையாளங்களை வெளியிடவில்லை.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிதாக திருமணமான இந்த ஜோடி சந்தோஷமாக வாழ்க்கையை துவங்கியுள்ளனர். இதில் முதலிரவில் மனைவி குடித்து இருப்பது கணவனுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் திருமண சந்தோஷத்தினால் தோழிகளுடன் பார்ட்டி என குடித்து இருப்பார் என்று மனதை ஆறுதல் படுத்திக் கொண்டார். ஆனால் அதன் பின்னர் தினம் தோறும் தனது மனைவி மது அருந்துவது தன் வாழ்க்கையை நரகமாக மாறுவதாக உணர்ந்துள்ளார். பின்னர் இது பற்றி இருவரும் எவ்வளவோ பேசிய நிலையில் ஒரு கட்டத்தில் தனது கணவனையும் குடிக்க சொல்லி வற்புறுத்த துவங்கி இருக்கிறார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கணவர் மனைவியை மீண்டும் அவளது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டதாகவும் கூறியிருந்தார். ஆனால் தன்னுடைய கணவர் தன்னை கைவிட்டதாக கூறி அந்தப் பெண் முதலில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு தம்பதியரை வரவழைத்து ஆலோசனை வழங்க காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது குடும்ப நல கவுன்சிலிங் போது மனைவி தினமும் மறு அருந்தவதாகவும் அதையே என்னையும் அருந்த சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் கணவர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் ஒரே அமர்வில் 3 முதல் 4 பானங்கள் உட்கொள்வார் எனவும் கணவர் கூறியுள்ளார். அப்போது மனைவி தனது குடிப்பழக்கத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் அவரது கணவரின் அறிக்கைகளை உறுதிப்படுத்தினார். பின்னர் இரு தரப்பினரும் தங்களது கருத்து வேறுபாடுகளை தீர்க்க முடிவு செய்து மீண்டும் ஒன்றாக வாழ ஒப்புக்கொண்டு திரும்பி சென்றுள்ளனர்.